Friday, December 18, 2009

சிறு கடன்

சிறு மளிகை கடை தொடங்குவதிற்கு ரூ.10000 சிறு கடன் வழங்கபட்டது.




Sunday, March 29, 2009

படித்ததில் பிடித்தது !!

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்


20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்


22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்


24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்


25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்


26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்


27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்


28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்


31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்


32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Source: http://globetrotter360.blogspot.com

Thursday, November 27, 2008

இன்றொரு நாள் !!!

31 mantras for Personality Development - புத்தகத்திலிருந்து சில...

இன்றொரு நாள் அதிகமாக உள்வாங்கிக்கொள்கிறேன்!

இந்த உலகில் நாம் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்பதைக் காட்டிலும் இன்பமான சங்கதி வேறு கிடையாது. ஆனால், பிறர் பேசுவதை நாம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? எதிராளி ஆரம்பித்த வாக்கியத்தை நாம் முடிப்பது, முழுதாக முடிக்கவிடாமல் நமது கருத்துக்களைத் திணிப்பது, சீரியஸாக மகள் கல்யாணத்தைப் பற்றிய கவலைகளை ஒருவர் பகிரும்போது, 'டீக்கடையில் மசால் வடை போட்டிருப்பானே' என்று நினைவுகளை அலைபாயவிடுவது போன்றவை இருவருக்கும் இடையேயான புரிந்துகொள்ளலை மிக மோசமாகப் பாதிக்கும். உங்கள் உடல் மொழியே நீங்கள் எதிராளிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் உலகின் முக்கியமான நபராக எதிர்கொள்ளத் தொடங்குங்கள். இன்றொரு நாள் பேசுவதைக் குறைத்து அதிகமாகக் கவனியுங்களேன்!

இன்றொரு நாள் குட்டி விஷயத்துக்கும் குதூகலப்படுங்களேன்!

தெரிந்த முல்லா கதைதான். ஆனாலும், சுவாரஸ்யமானது. சந்தைக்குச் சென்ற முல்லா வழியில் ஒரு நண்பரைச் சந்தித்தார். இரவு சமையலுக்கு ஒரு வாத்து வாங்கி வந்த அவர், மிகவும் சோகமாகக் காணப்பட்டார். என்னவென்று விசாரித்த முல்லாவிடம், ''எப்போதும் ஏதாவது ஒரு சோகம் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியை எங்கே சென்று கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை!'' என்றார் நண்பர். சட்டென நண்பரின் கையிலிருந்த வாத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார் முல்லா. எதுவும் புரியாத நண்பர் வாத்தை மீட்பதற்காக நண்பரைத் துரத்தத் தொடங்கினார். அங்குமிங்கும் போக்குக்காட்டிய முல்லா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்து நண்பரிடம் மாட்டிக்கொண்டார். வாத்தை முல்லாவிடம் இருந்து பறித்துக்கொண்ட தும் நண்பர் முகத்தில் முழுத் திருப்திப் புன்னகை! ''கண்டுபிடித்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் முல்லா. புரியாமல், ''எதை?'' என்றார் நண்பர். ''நீங்கள் தேடிய சந்தோஷத்தை!'' என்றார் முல்லா புன்னகை யுடன். கதை புரிந்தவர்களுக்கு வாழ்க்கையும் எளிதில் புரிந்திருக்கும்.
உள்ளம் மகிழ, உற்சாகமாக, பொங்கல், தீபாவளி, திருமணம், பிறந்த நாள், அஜீத் படம், ப்ரமோஷன், நியூ இயர் என்று காத்திருப்பது நம்மவர்களுக்குப் பழகிவிட்டது. எதற்குக் காத்திருக்க வேண்டும்? மழை நேர டீ அத்தனை இதமூட்டியதே, வாசித்த சிறுகதை உற்சாகமூட்டியதே, எஃப்.எம். பாடல் திடீரென மனதை நெகிழ்த்தியதே, பஸ் ஜன்னல் காற்று முடி கலைக்கிறதே என்று ஒவ்வொரு கணத்துக்கும் சந்தோஷப்படலாமே!

இன்றொரு நாள், பல முறை தள்ளிப்போட்ட ஒரு விஷயத்தை முடிப்போமே!

'அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போட்ட விஷயங்களைப் பட்டியலிடுங்களேன். பேப்பர் போதாத அளவுக்குப் பட்டியல் நீள்கிறதா! சின்ன வயதில் நம்மிடம் சொல்லியிருப்பார்களே... 'மனதில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போன வர்களின் ஆன்மா சாந்தியடையாமல் இங்கேயே சுற்றிச் சுற்றி வரும்!' என்று. அது போலத்தான் நீங்கள் முடிக்காத காரியத்தின் சுமை உங்கள் மூளையில் அழுத்தமாகப் படிந்துகிடக்கும். நீங்கள் எதிர்பார்ப்ப தைக் காட்டிலும் அதன் அழுத்தம் அபாரமானது. அது உங்களுடைய எல்லா செயல்களிலும் எதிரொலிக்கும். இரவு உணவைத் தவிர, அன்றைய பணிகள் அனைத்தையும் மாலை 6 மணிக்குள் முடிக்கப் பழகுங்களேன். மனதில் எழும் திருப்தியான நிறைவை, 'ஃபீல் குட் ஃபேக்டர்' என்பார்கள். உங்கள் வாழ்க்கை ஃபீல் குட் லைஃப் ஆக இருக்கும்!

இன்றொரு நாள்தானே... உங்களால் முடியும்!

Friday, November 7, 2008

பொன்மொழி

'இருபது வயது வரையில், உலகம் நம்மைக் கவனித்துக்கொண்டு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். நாற்பது வயது வரையில், உலகத்தை நாம் கவனித்துக்-கொண்டு இருக்கிறோம் என்று நினைத்துக்-கொள்கிறோம். அறுபதாவது வயதில் உலகம் நம்மைக் கவனிக்கவே இல்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம்!'''

Tuesday, September 23, 2008

வார்த்தைகள் !!!

"பிறருடைய வார்த்ததைகள் - உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒருநாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய"....
***
"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****
"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன."
------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***
"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
***
"சொல்லுக்கும், செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
***
"பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***
"மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்."
------ (ஓ.மில்லர்)
***
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
----(மனோதத்துவம்)

Source: tamizachi.com