'அதிகாரம் செய்!', 'அதிகாரத்துக்குக் கட்டுப்படு!' - இந்த இரண்டே கட்டளைகளில் அடங்கியிருக்கிறது இன்றைய உலகம்.
- வார்த்தைகளால் எதிராளிகளைக் கவர வேண்டுமென்றால், அவற்றை மிகக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதிக வார்த்தைகள் உங்களை மற்றவர்களிடையே சகஜமாக்கும். குறைவான வார்த்தைகள், உங்களை அதிகாரத்தில்வைக்கும். நீங்கள் கூறும் நாலு தெளி வான வரிகளைவிட ஒரே மையமான வரி உங்கள் ஆளுமையை அதிகரிக்கும்!
- உங்கள் நடவடிக்கைகள்தான் வெற்றியை ஈர்க்க வேண்டும், வாதத் திறமை அல்ல. செயல்படுங்கள்... வார்த்தைகளைச் செல வழிக்காதீர்கள்!
- மற்றவர்களுக்கு உங்கள் இருப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக வேண்டும். உங்களை எந்தளவுக்கு எதிர்பார்க்கிறார்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்கள் சுதந்திரமாக்கிக்கொள்ள முடியும்!
- யாருக்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். பகைவரைத் திகைக்கவைக்கவும், ஒதுங்கி இருப்பவரை ஒதுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்!
- நீங்கள் பலவீனமாக இருந்தால், யோசிக்காமல் எதிராளியிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களோடு போட்டியிட்டு வென்ற திருப்தியை எதிரிக்கு அளிக்காதீர்கள். சரணடைந்த காலம் உங்கள் தன்னம்பிக்கையை, தைரியத்தை, திறமையை மீட்டெடுக்கும். பலவீனத்தையும் பலமாக மாற்றும் சூட்சுமம் இது!
- ஒரு திட்டத்தில் உங்களுக்குத் தயக்கமோ, மாற்றுக்கருத்தோ இருந்தால், அதில் இறங்காதீர்கள். அந்தத் தயக்க மயக்கம் உங்கள் நடவடிக்கைகளில் பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அதே சமயம் 'சொல்லி அடிப்பேன்' என்ற நம்பிக்கை இருந்தால் அதிரடியாக இறங்கி அடித்துத் தூள் கிளப்புங்கள்!
- வெற்றிக் கோட்டைத் தாண்டினால்தான் வெற்றி. அது வரை ஓட்டத்தை நிறுத்தக் கூடாது. துரத்தி வருபவனோடு இடைவெளி அதிகமிருந்தாலும் டாப் கியர் தடாலடிதான் உங்களை 'டாப்'பில் வைக்கும்!
- அசரவைக்கும் அபார சாதனைகளுக்கான நடவடிக்கைகள்கூட சகஜமாக, சாதாரணமாக இருக்க வேண்டும். எதையும் ஜஸ்ட் லைக் தட் சாதிக்கும் இயல்பு, உங்களை இன்னமும் 'சரக்கு' உள்ளவராகக் காட்டும்!
- வெற்றிக்காகப் போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவு முக்கியம், வெற்றியை ரசித்து ருசிப்பதும்!

No comments:
Post a Comment