Monday, August 11, 2008

கலாசாரம்!

கலாசாரம் என்பது என்ன? முந்தின தலைமுறை செய்த குழப்பங்கள் எல்லாம் இன்றைய கலாசாரம். நீங்கள் செய்யும் குழப்பங்கள் எல்லாம் அடுத்த தலைமுறையின் கலாசாரம்.

செருப்பாக இருந்தாலும், கிரீடமாக இருந்தாலும், அதை ஒரேவிதமான பொறுப்போடு கையாளும் கலாசாரத்தை உங்களுக்குள் கொண்டுவாருங்கள். எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும் ஒரே விதமான உள்ளுணர்வோடு அதை அணுகும் கலாசாரத்தை ஆராதியுங்கள். அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன், அவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற பாகுபாடு பார்க்காத கலாசாரத்தைப் பேணுங்கள். தினப்படி செய்யும் சிறு வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முழு ஈடுபாட்டுடன் செயல்படும் கலாசாரத்தைத் தழுவுங்கள். புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துங்கள்.
மற்றபடி, வேறு எந்தக் கலாசாரத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை.


எதுவானாலும் முக்கியம், அல்லது எதுவுமே முக்கியமில்லை என்ற இரண்டு வித நிலைப்பாடுகளும் ஆன்மிகமானவை. இப்படி வாழ முடிந்தால், அதுவே சிறப்பான கலாசாரம். இந்தக் கலாசாரத்தை உங்கள் குழந்தைகளுக்கும் அமுதமாய்க் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அப்புறம், அவர்கள் கிழக்கே வாழ்ந்தாலும் மேற்கே வாழ்ந்தாலும், ஒரு பிரச்னையும் இல்லை!

-- சத்குரு ஜக்கி வாசுதேவ்

No comments: